G.P. ஞானஒளி மகான் - கேள்வி பதில்

1. சலிப்பான எண்ணத்திலிருந்து எப்படி விடுபடுவது சுவாமி?

பதில்: ஒரு வேலையைச் செய்கிறீர்கள். அது பாதியில் நின்று விடுகிறது. ஒரு சலிப்பான எண்ணம் வந்து, செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிடுவோம் என்று தோன்றுகிறது. ஏன்? அதில் உங்களுக்கு உற்சாகமும் பொறுப்பும் இல்லை என்று பொருள். அந்தச் செயலைச் செய்து முடிக்க வேண்டும் என்கின்ற வைராக்கியமும் பொறுப்பும் உங்களிடம் இருந்தால் அதை எப்படிச் செய்யாமல் இருப்பீர்கள்?

செய்யும் வேலையில் உங்களுக்குத் திடமான ஊக்கம் இல்லை, நிறைவாகச் செய்ய வேண்டும் என்ற திட்டமில்லை. அதனால் செய்வதைப் பாதியில் விட்டுவிட்டீர்கள். அதற்கு யாரும் துணை வர முடியாது. நீங்கள்தான் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். இது எல்லாவற்றிக்கும் பொருந்தும். சமையல் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள். சாமி வந்திருக்கிறார், இன்றைக்குப் பொங்கல் செய்ய வேண்டும் என்று முடிவுசெய்து அடுப்பில் குக்கரை வைத்துவிட்டு, ‘சரி போ! பொங்கல் வைக்காவிட்டால் என்னஎன்று அப்படியே வெளியே வந்தால் உங்களுக்குப் பொறுப்பில்லை என்று பொருள். அதற்கு ஆண்டவன் பொறுப்பா அல்லது உலகம்தான் பொறுப்பாக முடியுமா? இந்த இடத்தில் ஆண்டவனைப் புகுத்துவதோ உலகத்தைப் புகுத்துவதோ அறியாமை.

2. ஒரு தாய்க்கு மூன்று குழந்தைகள், அதில் இரண்டு குழந்தைகள் ஒழுக்கமாக நல்ல முறையில் வளர்கின்றன. ஒரு பிள்ளை தவறான வழியில் போய்விடுகிறது. இதற்குக் காரணம் என்ன? மூன்று பிள்ளைகளும் சீராக வளர என்ன செய்திருக்க வேண்டும்?

பதில்: ஒருவர் நன்றாக இருக்கிறார். ஒருவர் நொண்டியாக இருக்கிறார். ஒருவர் கண்ணில்லாமல் இருக்கிறார். ஆண்டவன் ஏன் இப்படி செய்கிறான்? அப்படியானால் ஆக்கியவனை அழித்தே கொன்றுவிடலாமா என்று ஒருவன் வள்ளுவரிடம் கேட்கின்றான். காரணம் என்னவென்றால்வினைப்பயன்”. அவனவன் செய்த, அவளவள் செய்த நல்லது தீதுகளுக்குக் தக்கவாறும் அவன் செய்த காரியத்தால், செயலால் ஒரு ஜீவன் படமுடியாத கஷ்டத்தைப் படும்படியாக ஏற்படுமானால் அந்த கஷ்டத்தை அனுபவித்தவன்ஐயோ படுபாவி, இவன் புழுத்துத்தான் சாவானா, கைகால் வராமல்தான் சாவானா? ஊரெல்லாம் சிரிக்கும்படி சாவானாஎன்று நெஞ்செரிய அவன் கொடுத்த தீய வாக்குகள் தீமை செய்தவர்களுடைய பின்மூளையில் அப்படியே பதிவாகிறது. அதைத்தான் hard disc என்று கூறுவதாகும். அதை இந்திய நாட்டு ஆன்மிகத்தின்படிசித்ர குப்தன்என்று சொல்வர்.

அந்தப் பதிவு, பிறந்த குழந்தைக்குத் தெரியாமல் போனாலும் அந்த குழந்தை வயது வந்து, வாலிப வயதில் தன்னுடைய பரிணாமத்தை உற்பத்தி செய்யக்கூடிய பருவம் வரும் வரை பொறுமையாக இருந்து அதன் பின்னால் சுமார் 15-17 வயதிலிருந்து வேலை செய்ய ஆரம்பிக்கும். அது இவனுடைய “transmigration track”.

“(முற்கால) அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ, உடல்கள் எத்தனை எத்தனை உடல்களோஎன்று பட்டினத்தார் அவர்கள் பாடியதைப் போல் நல்லது செய்திருந்தால் அவனவன் தெரிந்து கொள்ளலாம்.

தக்கார் தகவிலார் என்பது அவரவர்

எச்சத்தால் காணப் படும்

ஒரு பிணத்தை எடுத்துக்கொண்டு செல்கிறார்கள். அந்த பிணத்தைப் பார்த்துஅப்பா, சண்டாளன் தொலைந்தானா?” என்று சொல்வது உண்டா இல்லையா சொல்லுங்கள். இன்னொரு பிணத்தைப் பார்த்துஐயோ, மகராசன் போயிட்டானே. ஏழை எளியவர்களுக்கு எதிர்பார்க்காமல் கொடுத்து உதவுவான். உழைப்பால் உதவி செய்தும் உதவுவானே. அப்பேர்ப்பட்ட புண்ணியவான். அந்தக் கடவுளுக்கு கண்ணில்லையா? இவனைக் கூட்டிக்கொண்டானேஎன்று பேசுவது உண்டா இல்லையா? தக்கவர்களாக நடந்து கொண்டால் மறுமையில் தக்கவர்களாக வாழலாம். தக்கவர்களாக, மனித மனப்பான்மைக்கும் மனித தன்மை ஏற்றுக்கொண்ட அளவிற்கும்அன்பும் அருளும் உடைத்தாயின்என்ற வழியிலே தக்கபடி வாழலாம்.

ஆதலினாலே ஆண்டவனிடம் எந்தக் குறையும் கிடையாது. நாம் செய்த வினையை நாம்தான் அனுபவிக்க வேண்டும். பிறவிகள் பற்றியெல்லாம் தெரிந்து கொண்டால் நமக்குக் கிறுக்குப் பிடித்துவிடும். நாம் முன்பு ராஜாவாக இருந்திருப்போம். இப்பொழுது கூஜா கூட தூக்க முடியாத கூலி ஆளாக இருப்போம். அதையெல்லாம் தெரிந்துகொண்டால் பைத்தியம் பிடிக்காதா? அதனால் அவற்றையெல்லாம் தெரிவிக்காமல் நம்மை வாழ வைக்கிறான் ஆண்டவன். எனவே பிறவிகளின் இன்ப துன்பங்களுக்கு அந்தந்த ஜீவனுடைய முன் வினைப்பயனே காரணம்.

3. அகர்மத்தில் கர்மம், கர்மத்தில் அகர்மம் - விளக்கம் தேவை சுவாமி.

பதில்: அநேகம் பேர் இதற்குப் பலவிதமாக விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். கர்மத்தில் அகர்மம் - இது ரொம்ப criticalஆன matter. முயற்சி செய்தால் ஆயிரத்தில் ஒருவருக்குக் கைவல்யமாகலாம். ஆயிரத்தில் ஒருவர் முயற்சி செய்தால் வெற்றி அடையலாம். நீ வேலை செய்கிறாய். கடமையைச் செய்கிறாய். இயந்திரமாக வேலை செய்கிறாய். இதைச் செய்ய வேண்டும், இப்படிச் செய்ய வேண்டும் என்றே ஒரு கணினிபோல் வேலை செய்கிறாய். ஆனால் மின்சாரத்தைப் போல அமைதியாய் இருக்கிறாய். இது கர்மத்தில் அகர்மம். வேலை செய்கிறாய். ஆனாலும் அந்த உணர்வில் ஒரே லயமாக இருந்துகொண்டே இருக்கிறாய். இது மிகவும் அரிதினும் அரிதான ஒரு செயல்.

அகர்மத்தில் கர்மம்சும்மா உட்கார்ந்திருக்கிறோம். அப்போது கை கால்கள் வேலை செய்வதில்லை. பேசாமல்தான் உட்கார்ந்திருக்கிறோம். ஆனாலும் தியானத்திலே உணர்வைப் பார்க்கிறோம். உண்டா இல்லையா? உணர்வு என்பது தெரிகிறதா இல்லையா? அப்போது, படம் அன்று order கொடுத்தோமே, அதைப் பாதியுடன் விட்டுவிட்டோமே, அதை எப்பொழுது முடிக்கலாம் என்று அந்த எண்ணமும் வருகிறது. அது வேலையாய் தெரியவில்லையா? உள்ளே நடக்கும் வேலை. ஆனால் கை கால் வேலை செய்யவில்லை. தியானத்தில் உணர்வைப் பார்க்கிறோம். ஆனால் உடனே அதை விட்டுவிட்டு order கொடுத்த அந்த படத்தைச் சீக்கிரமாக முடிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது. பிறகு, ‘அடடே! இதை எண்ணிப் பார்த்தது தவறுஎன்று மறுபடியும் உணர்வைப் பார்க்கிறோம். அப்படி உணர்வைப் பார்க்கும்பொழுது உடனே வீட்டு நினைவு வருகிறது. வீட்டில் ரேஷன் தீர்ந்து போய்விட்டது. வெளிக்கடையிலே விலைக்கு அரிசி வாங்கி வருமாறு கூறினார்களே, மறந்து விட்டோமேஎன்று ஒரு எண்ணம் எழுகிறது. மீண்டும், ‘அடடே! அந்த எண்ணம் வேண்டாம். மனமே, அங்கே போகாதேஎன்று சொல்கிறோம்.

நம்முடைய புத்தி வேலை செய்துகொண்டேதான் இருக்கிறது. Physical activities இல்லை. வாய், கை, கால் முதலான பௌதீக கருவிகளுக்கு வேலை இல்லை. ஆனால் உள்ளே நீ வேலை செய்கிறாய். அந்த வேலையிலே நினைவினிடத்திலேயே நிற்க முயற்சி என்ற செயல்களைச் செய்து கொண்டிருக்கிறாய். ‘நினைவினிடத்தில் நினைவை நினைத்து, நினைவில் நிலைத்து, நினைவோடு நிற்க முயற்சி செய்தல்என்ற கர்மத்தை செய்கிறாய். இது அகர்மத்தில் கர்மம். அதாவது ஸ்தூல உடலில் கருவி கரணங்கள் அமைதியாகவும், ஆனால் உள்ளத்தில் மனம் புத்தியில் கர்மமாகவும் செயல்படுகிறது. இது அகர்மத்தில் கர்மம் என்று சொல்வதாகும்.

ஒரு பம்பரம் இருக்கிறது. அதைக் கயிற்றினால் சுற்றிஸர்என்று ஆட்டிவிட்டால் சுற்றுகிறது. ஆனால் பார்த்தால் சுற்றுவதைப் போலத் தெரிகிறதா? தெரியவில்லையே. அந்த அளவு உள்ளே எல்லாம் சுழன்று அப்படியே நிற்க வேண்டும். அதற்கு முயற்சி செய்வதுதான் அகர்மத்தில் கர்மம். 

4) தனி மனித சமாதானம் உலகை எப்படி சமாதானமாக்கும் சுவாமி?

ஒவ்வொரு தனி மனிதனும் உண்டு, உறங்கி உடுக்க குறைவில்லாமல் இருந்தால் அதுபோல எல்லா மனிதர்களுக்கும் இருந்தால் உலக சமாதானம். அது அரசியல் நிர்வாகத்தைச் சேர்ந்தது. ‘அரசன் மக்களின் கூலிக்காரன்’ - இது நமது குருமகானின் திருவாய்மொழி. மக்கள் கொடுக்கும் மரியாதை  என்ற கூலிக்கு உண்டான விசுவாசம் இருந்தால் உலகம் சமாதானமாக இருக்கும்.

5) ‘மகான் மகானே என்று என்னை வணங்கினாலும் ஒன்றுதான்; கல்லை வணங்கினாலும் ஒன்றுதான்என்று பரஞ்ஜோதி மகான் அவர்கள் கூறுவதன் பொருள் என்ன சுவாமி?

இப்போது சர்வ சாதாரணமாக இந்தக் கோயிலில் வந்து சாமி சிலையின்முன் சென்று, ‘நான் ஒரு பரிசுச்சீட்டு வாங்கியுள்ளேன். இதில் எனக்கு 10 லட்சம் ரூபாய் விழுந்தால் உனக்கு ஒரு 10,000 ரூபாய் காணிக்கையாய் போடுகிறேன்என்று ஒருவன் வேண்டிக் கொள்வானேயானால் அது பக்தியும் அல்ல, பிரார்த்தனையும் அல்ல. நீ எதை விரும்புகிறாய்? அதை அடையக் கேட்க வேண்டும். Constant peace & health – நிலையான நிம்மதியும் ஆரோக்யமும்தான் மனிதனுக்குத் தேவை. அதுதான் அறிவாளிக்குத் தேவை. அது உன் முயற்சியில் உள்ளது.

             உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்

             எண்பது கோடி நினைந்து ஏங்குவனே

எண்ணத்திலிருந்து விடுதலையாகி உன்னையே நீ அறிந்து உன் தேவைக்கு மட்டும் வாழ்வாயேயானால் உன்னைப் போல் எல்லோரும் வாழ நீ தொண்டு செய்வாய். அப்பொழுது உலகமும் சேமமாக (சுபிட்சமாக) இருக்கும்.

6) செழிக்கட்டும் விவசாயம் என்ற பிரார்த்தனையை விவரிக்க வேண்டுகிறேன் சுவாமி.

பதினெட்டு சித்தர்கள் தோன்றி வாழ்ந்து நிறைவுபெற்றது தென்னாடு. வேதம் தோன்றியது தமிழ்நாடு. ஆனால் இன்று இந்நாடு பெருங்காயத்தைக் கடலில் போட்டாற்போல் இருக்கிறது. அதற்கு நாம் என்ன செய்யலாம்? இதற்கு அரசியலார்தான் காரணம்.

காவேரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை சந்தர்ப்பமாகப் பார்க்க நேர்ந்தது. நான் ஒரு விவசாயியாக இருந்தவன். இன்று நீர் கிடைத்துவிட்டது. ஆனால் அது மக்களுக்கு எப்படியாவது பயன்படப் போகிறதா என்றால் இல்லை. அதை நினைக்கும்போது கண்ணில் நீரே வந்துவிட்டது. விவசாயத்தில் கதிர் முற்றி வரும்போது பூட்டை பிடித்திருக்கும். அதைச் சுற்றிலும் வெள்ளை வெள்ளையாகப் பூச்சி வந்து அரிக்கும். ஆனால் நம் கதிருக்கு எந்த இடையூறும் வராது. இதுபோன்று எண்ணிலடங்கா ஜீவராசிகள் விவசாயத்தினால் உயிர் வாழ்கின்றன.

வரப்பில் நண்டு ஓடி புழுவைப் பிடிக்கிறது. நண்டு இருப்பதனால் நிலப்புழுக்களால் தொந்தரவு ஏற்படுவதில்லை. விவசாயத்தால் உலகிற்கு அபரிமிதமான நன்மைகள் ஏற்படுகின்றது. நீர் வாழ்வன, நிற்பன, ஊர்வன, பறப்பன, நடப்பன உள்ளிட்ட எல்லா உயிரினங்களுக்கும் இது பயன்படுகின்றது. ‘செழிக்கட்டும் விவசாயம்என்ற வாசகம் வெறுமனே சொல்வதல்ல. அது அவனியின் அமைதிக்கான தாரக மந்திரம்

7) இன்றுமாற்றிப் பிறந்த நன்னாள்’. மாற்றிப் பிறப்பது என்றால் என்ன சுவாமி?

மனதிலிருந்து விடுபடுவது. இதைத்தான் ஔவை பிராட்டி அவர்களும், ‘மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்என்று கூறியுள்ளார்கள்.

8) மோசமும் மோட்சமும் ஒன்றே என்ற மகான் அவர்களின் வாசகத்திற்கு விளக்கம் வேண்டும் சுவாமி.

பரிசம், சுவை, நாற்றம், கேள்வி, பார்வை இவையெல்லாம் உறக்கத்தில் இல்லை. ஆனால் அவற்றை உண்மையென்று நினைக்கிறீர்கள். புலன்களும் அவற்றின் மூலம் இயங்கும் மனதும் மோசம் (ஆட்படாமல்) போனால், அதுவே மோட்சமாகும்.

9) தேவர்கள் யார்? அசுரர்கள் யார்?

அசுரர்கள் தனியாகக் கிடையாது. மனிதர்களுடைய சுபாவம் மாறும்போது அசுரர்கள், தேவர்கள் என்பது உண்டு. தேவர்கள் சரீரம் இல்லாமல் வினாடிக்கு வினாடி நினைத்த இடத்தில் போய் சூக்குமமாக, நாம் எப்படி கனவில் இனிப்பு, புளிப்பு, கசப்பு முதலான அனைத்தையும் அனுபவிக்கிறோமோ, அதுபோல் அவர்களால் அனுபவிக்க முடியும். அதனால் தேவர்களுக்கு துன்பம் என்பதே இல்லை. அவர்கள் கஷ்டப்பட வேண்டிய அவசியமேயில்லை. அதனாலேயே அவர்களுக்கு மனிதப்பிறவி எளிதில் கிட்டாது. ‘விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டாஎன்று மாணிக்கவாசகர் கூறுவதுபோல, வானவரும் மனிதர்களாகிய நம் நிலையை அடைய முடியவே முடியாது.

10) தேவர்களெல்லாம் மனிதர்களாக வந்து பிறகு தேவர்கள் ஆனவர்களா? பேய் என்பது என்ன சுவாமி?

பயந்தால் பேய். பயமின்றிப் பார்த்தால் ஒரு உருவம் தெரியும். அதன் கால் நிலத்தில் முட்டாது. பார்த்தால் கண்டு கொள்ளலாம். அவர்களும் நகர்ந்து வருவார்கள். பார்த்தால் நடப்பதுபோல் தெரியும். ஆனால் அவர்களின் கால் தெரியாது. நல்ல உணர்வாளர்களின் அருகில் அவர்கள் வரவே மாட்டார்கள்.

11) நீங்கள் சொல்வதையெல்லாம் நம்புவதுதான் சரணாகதியா சுவாமி?

அது தவறு. விசாரத்திற்கு ஒத்து வந்தால் மட்டும் நம்புங்கள். இல்லாவிட்டால் நம்புவது தர்மமல்ல. அது மீண்டும் மீண்டும் சந்தேகத்தில்தான் அமிழ்த்தும். உண்மையான குருவிடம் சரணாகதி அடையலாம். குரு என்பவர் தஞ்சம் அடைந்தவனின் அறிவைப் பிரகாசப்படுத்தி அவனுடைய நிம்மதிக்கு உண்டானவற்றை மட்டும்தான் கூற வேண்டும். குரு என்பவர் கையேந்துபவராக இருக்கக்கூடாது, (போதும் என்று) கையை உயர்த்தியவராகத்தான் இருக்க வேண்டும். அவரிடம் சரணாகதி அடையலாம்.

12) ஒரு தவறான எண்ணம் வந்தால் அது எப்படி கடவுளாகும் சுவாமி?

அது நினைப்பைச் சேர்ந்தது. தவறான எண்ணம் என்பது தனக்கு இயலாததன்மேல் ஆசைப்படுவதாகும். அது இவனுடைய தவறுதானே. நாம் போய் ஒரு வேங்கையைப் பிடித்து அடக்க வேண்டும் என்று நினைத்தால் அது நடக்குமா? அதை ஏன் நினைக்கிறீர்கள்? இரத்த ஓட்டத்தினாலும், ஆறு சுவைகளினாலும் பலவிதமான எண்ணங்கள் தோன்றலாம். வீதியில் மிதிவண்டியில் போகும்போது எதிரே வரக்கூடிய போக்குவரத்து நெரிசலிலிருந்து எப்படி விலகிப் போக வேண்டும் என்று நாம் நிர்ணயப்படுத்திக் கொள்கிறோமோ அதுபோல் எண்ணங்கள் வருவது இயல்பென்றாலும் அவற்றில் நல்லது தீயது பார்த்து விலகிக் கொள்ள வேண்டியது நம்மைச் சேர்ந்ததாகும்.

13) எண்ணமே கடவுள் என்றுநான்கடவுள்கூறுகிறது. இதன் பொருள் என்ன சுவாமி?

Ever and everywhere in the universe, all the particles are in activation. Particularly, each and every particle has got so many varieties of programs. So, who is the programmer & who is the performer? There should be something.  In the Primordial Lord, the worlds reach the states of origination, sustentation &dissolvation like bubbles in the water. What is that water? Sky, water, earth, air, fire. These are the causal principles.  They will never disappear. They are ever and everywhere in this universe. In this ocean only, all the worlds reach the states of origination, sustentation &dissolvation.

எண்ணமே கடவுள் - Thought is God.  It means, in each & every particle, there are so many programs. THAT PROGRAM IS THE THOUGHT and is that of the Primordial Lord. It is only the program of the Primordial Lord that has evolved as the entire worlds in this Universe.  This thought cannot be called as the thought of human beings.